அவுஸ்திரேலிய முகாம்களில் 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட மூத்த அகதி விடுதலை
அவுஸ்திரேலிய முகாம்களில் 8 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட 80 வயதுடைய புகலிடக்கோரிக்கையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரொஹின்யா அகதியான Mohammad Ayub, கடந்த 2013ம் திகதி தனது இரு மகள்கள், மகன் மற்றும் மனைவியுடன் படகு மூலம் வந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்தார்.
இதையடுத்து நவுறு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட இக்குடும்பம் 2019ம் ஆண்டு மருத்துவ தேவைகள் கருதி அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டு விடுதியில் தடுத்துவைக்கப்பட்டது.
இதன் பின்னர் Mohammad Ayub-இன் மகள்களும் மனைவியும் சிட்னிக்கு அனுப்பப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்பட்ட அதேநேரம் Mohammad Ayub-உம் மகன் Sharif Ayub-உம் பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
பிரிஸ்பனில் சுமார் இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மொத்தமாக 8 ஆண்டு தடுப்புமுகாம் வாழ்க்கைக்குப்பின்னர் தற்போது இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளில் வயதில் மிகவும் மூத்தவராக 80 வயதுடைய Mohammad Ayub, இவரே இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri