பிரித்தானியாவில் கோவிட் - 19 கட்டுப்பாடுகளில் தளர்வு! பிரதமரின் நான்கு அம்ச திட்டம் வெளியானது
பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் - 19 கட்டுப்பாடுகளில் தளர்வை கொண்டுவரும் நோக்கில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நான்கு அம்ச திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில் கோவிட் - 19 தொற்று வேகமாக பரவிய நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மரபணு மாற்றமடைந்த வைரஸ் தொற்று பிரித்தானியாவில் வேகமாக பரவியது. இதனால் பிரித்தானியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்ததுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் சடுதியாக உயர்ந்தது.
இந்நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் நோக்கில் பிரதமர் நான்கு அம்ச திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் முன்னதாக கூறியிருந்தது.
இதன்படி, மார்ச் 8 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளையும் மீள திறப்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
நண்பர்களையும் குடும்பத்தினரையும் எப்போது மீண்டும் பார்க்க முடியும்? மார்ச் 8 முதல் பூங்காக்களில் அல்லது தேநீர் விடுதிகளில் இருவர் ஒன்றாக சந்திக்க முடியும்.
பராமரிப்பு இல்ல குடியிருப்பாளர்களை பார்வையிட ஒருவர் அனுமதிக்கப்படுவார். குழுக்களாக ஒன்றுகூடுவது எப்போது? மார்ச் 29ம் திகதி முதல் பூங்காக்கள் மற்றும் தேனீர் விடுதிகளில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு வழங்கட்டுள்ளது.
இதன் பொருள் பல வீடுகளில் இருந்து அதிகபட்சம் ஆறு பேர் கொண்ட குழுக்கள் வெளியில் சந்திக்க முடியும், சந்திப்பு இரண்டு வீடுகளுக்கு இடையில் மட்டுமே இருந்தால் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும்.
நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு கோவிட் பரவும் ஆபத்து குறைவாக இருக்கும் இடத்திற்கு வெளியே சந்திக்க அதிக நெகிழ்வுத்தன்மையை அனுமதிப்பதற்கும் நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்கின்றதா? ஆம், மார்ச் 29 முதல் வெளிப்புற விளையாட்டுளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, டென்னிஸ் அல்லது கூடைப்பந்து விளையாடும் வசதிகள் மீண்டும் திறக்கப்படும். ஏப்ரல் 12ம் திகதி முதல் அத்தியாவசிய தேவையற்ற சில்லறை கடைகள், சிகையலங்கார நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட வெளிப்புற இடங்கள் மீண்டும் திறக்கப்படும்.
விருந்தோம்பல் இடங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும், ஆனால் வெளிப்புற நோக்கங்களுக்காக மட்டுமே, அதாவது உணவகங்கள் மற்றும் பப்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளியே மட்டுமே சேவை செய்ய முடியும், இறுதிச் சடங்குகளில் 30 பேர் வரை கலந்துகொள்ள முடியும்.
திருமண வரவேற்புகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை 15 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மே 17ம் திகதி முதல், இரண்டு வீடுகள் அல்லது ஆறு பேர் கொண்ட குழுக்கள் உட்புறத்தில் சந்திக்க அனுமதிக்கப்படும், மேலும் விளையாட்டு நிகழ்வுகளில் மட்டுப்படுத்தப்பட்ட கூட்டம் அனுமதிக்கப்படும்.
ஜூன் 21ம் திகதி முதல், சமூக தொடர்புக்கான மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.