வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 2017 மார்ச் 08ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழுப்பப்பட்ட கோசங்கள்
கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ் தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?, 'omp' ஒரு கண்துடைப்பு நாடகம், சர்வதேச விசாரணையே தேவை போன்ற கோசங்களை எழுப்பியவாறு இன்றைய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக தகவல் - சுழியன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri