பாரபட்சமாக நடத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்: முன்வைக்கப்ட்டுள்ள குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவி கொடுக்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இதுவரைகாலமும் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
OMP அலுவலகத்திற்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் நிலைப்பாடு தொடர்பான ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
குறித்த அறிக்யைில் மேலும்,
15 வருடங்கள்
“வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி வருவதுடன் 20.02.2017 இலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம்.
தொடர்ந்து வந்த அரச தலைமைகளால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்னும் போராடி வருகின்றோம்.
OMP சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவி கொடுக்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள்.
பொறிமுறை செயற்பாடு
பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியோ அவர்களின் பங்குபற்றலுடனோ அப்பொறிமுறையைச் செயற்படுத்த முனைப்புக்காட்டப்படுவதில்லை.
மாறாக நாங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கும் வெளிப்படைத்தன்மையற்ற நிலையுமே காணப்படுகிறது .
”எந்தப் பொறிமுறையும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்போ, விருப்போ இல்லாவிட்டால் வெற்றியளிக்காது “என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள எவரும் தயாரில்லை” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |