சர்வதேசத்திடம் நீதி கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
எமக்கு நீதியை பெற்றுத்தருவதற்கு அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த உறவுகளால் இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் போராட்ட பந்தலுக்கு முன்பாகவே இவ் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர்கள் இதனைக்கூறியுள்ளனர்.இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில்,
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. எமக்கான நீதி கிடைக்கவில்லை. எமது போராட்டங்களில் பங்குபற்றிய பல தாய் தந்தையர்கள் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடனேயே உயிரிழந்துள்ளனர்.
எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இவ் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு பிள்ளைகளின் படங்களையும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளினுடைய கொடிகளையும் தாங்கியவாறு கண்ணீர் மல்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.












யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 52 நிமிடங்கள் முன்

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
