சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வேண்டுகோள்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் அன்றைய தினம், எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஊடக மன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறுகையில், வடக்கு - கிழக்கு மக்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக கடைப்பிடிக்க வேண்டும்,அந்த நாளை புறக்கணிக்க வேண்டும். இந்த நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயம் வரை சுதந்திர தின எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் பேரணியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், தமிழ்த் தேசிய அரசியல் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என கோரியுள்ளனர்.
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam