புறக்கணிக்கப்பட்டார் மகிந்த: மொட்டு கட்சி தொடர்பில் மைத்திரி விளக்கம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது ஆண்டு நிறைவு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
''கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுவரொட்டியை மறைத்து வேறொரு தரப்பினர் சுவரொட்டியை காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நாளை (03) நடைபெறுகின்றது. இதன்போது
பதவி நிலையில் எவ்வித மாற்றமும் வராது. அது தொடர்பில் கட்சியின்
நிறைவேற்றுக்குழுதான் தீர்மானம் எடுக்கும்.
மொட்டு கட்சியின் பிளவு நிலை
எங்கள் கட்சியை பிளவுபடுத்தும் செயற்பாடு வெளிதரப்பினரால் மேற்கொள்ளப்படுகிறது. கட்சிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. ஒற்றுமையாகவே இருக்கின்றோம். பிளவு என்பது உருவாக்கப்பட்ட கதையாகும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை.
குறிப்பாக மொட்டு கட்சி தற்போது பத்து கட்சிகளாக பிளவுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அவர்களின் பிளவு நிலையை காணமுடிகிறது.
தற்போது ஆளும் தரப்பில் சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் ஒருவர் மாற்றப்படுவதால் மட்டும் தீர்வு கிடைக்காது." என தெரிவித்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)