ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த இடைக்கால தடை மனு நிராகரிப்பு
தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம் எனக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த இடைக்கால தடை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் மூன்று ஊடக நிறுவனங்களுக்கு எதிராக, இந்த இடைக்கால தடை உத்தரவைக் கோரி, அவர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவே இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வழக்கு விசாரணை, 2021, ஜனவரி 24 ஆம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ச, 2021, மார்ச் 19 அன்று திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்து, ‘முஸ்லிம் தீவிரவாதம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணையம்’ என்ற தலைப்பில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்களில், தனக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவதூறான விடயங்களை, மூன்று ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்பியதாக றிசாட் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் தனக்கு எதிராக 'பொய்யான மற்றும் அவதூறான' கருத்துக்களைத் தெரிவித்தமைக்காக, 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் மனுதாரரான றிசாட் பதியுதீன் கோரியிருந்தார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri