நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் ஏமாற்றமடைந்த ராஜித!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான பிடியாணை தொடர்பில் அவர் தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி, நேற்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு தாக்கலை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றச்சாட்டு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அதனை ராஜித புறக்கணித்ததாகவும் பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜிதவிற்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையிலிருந்து தப்பிக்க அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிடியாணையில் இருந்து தப்பிக்க ராஜித மேற்கொண்ட முயற்சி நீதிமன்றத்தின் உத்தரவால் இன்று அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா





குணசேகரனுக்கு சமமாக உட்கார்ந்து ஜனனி காட்டிய மாஸ், கதிரை வெளுத்த சக்தி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
