அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிப்பு
மூன்று அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்றம் நிராகரிப்பு
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று(27.09.2022) வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம்

2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தினை கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான மா. இளஞ்செழியன், இராமகமலன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தொடர் விளக்கத்திற்காக எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்

குறித்த அரசியல் கைதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் முன்னிலையாகியிருந்தார்.
இந்த அரசியல் கைதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் ரோகான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri