மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 118 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 101 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஷ்ரீனா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் ஆனது மே மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுக்கள்
இந்த உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் மற்றும் 9 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அதில் அரசியல் கட்சிகளில் இருந்து 19 கட்சிகளும் சுயேட்சை குழுவில் இருந்து 25உம் ஆக 139 பேர் கட்டு பணத்தை செலுத்தி இருந்தனர் மார்ச் மாதம் 17ம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரைக்கும் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 144 வட்டாரங்களில் 146 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் ஆனது இடம்பெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரத்திற்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்! விஜயகலா மகேஸ்வரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
