கொழும்பின் சில இடங்களில் விசேட வாகன திட்டம் தொடர்பான ஒத்திகை! பொலிஸார் வழங்கியுள்ள தொலைபேசி இலக்கம்
73ஆவது சுதந்திர தின வைபவத்திற்கு அமைவாக கொழும்பில் சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை ஆகிய பகுதிகளில் விசேட வாகன திட்டம் தொடர்பிலான ஒத்திகை நடைபெறுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 30ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 3ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த சுதந்திர தின வைபவ ஒத்திகையின் காரணமாக காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரையில் இந்த விசேட வாகன திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சுதந்திர தினத்திற்கு அமைவாக இடம்பெறும் வீதி சிரமங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கு அல்லது மாற்று வீதி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 0112 433333 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் வாகன போக்குவரத்து தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri
