மட்டுப்படுத்தப்படவுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களின் புனர்வாழ்வு செயற்திட்டம்
நிதிப்பற்றாக்குறை காரணமாக போதைப்பொருள் பாவனையாளர்களின் புனர்வாழ்வு செயற்திட்டத்தை மூன்று மாதங்கள் வரை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுவரை போதைப்பொருள் பாவனையாளர்களை அதிலிருந்து மீட்டெடுத்து புனர்வாழ்வளிப்பதற்கான செயற்திட்டம் ஒரு வருடகால தடுப்புக் காவலுடன் செயற்படுத்தப்படுகின்றது.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சிறைச்சாலைகளில் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

புனர்வாழ்வு செயற்திட்டம்
அவர்களுக்கான மருத்துவ, உணவு மற்றும் ஏனைய விடயங்களுக்காக பெரும் தொகைப் பணம் செலவிடப்படுகின்றது.
இந்நிலையில் அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை காரணமாக குறித்த மறுவாழ்வு செயற்திட்டத்தை ஒரு வருட காலத்தில் இருந்து மூன்று மாதங்கள் வரை மட்டுப்படுத்த நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.
அறிவுறுத்தல்கள் வழங்க நடவடிக்கை

இது தொடர்பான சுற்றுநிரூபம் ஒன்று சகல நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றுநிரூப வடிவில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri