உச்சம் தொட்ட முன்னாள் போராளி! புலம்பெயர் தமிழ் தொழிலதிபரின் நெகிழ்ச்சியான தருணம் (Video)
நாட்டில் 30 வருடங்களாக நீடித்த யுத்தம் பலரது வாழ்க்கை புரட்டிபோட்டுள்ளது. தங்களது மண்ணிற்காக போராடியவர்கள் பின்னாளில் தங்களது அன்றாட வாழ்ககையை கொண்டு நடத்த போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அப்படி தனது அன்றாட வாழ்வாதாரத்திற்காக போராடிய முன்னாள் போராளிகளில் ஒருவரே சுரேஸ்குமார் (குயிலின்பன்) எனும் முன்னாள் போராளி.
முள்ளிவாய்க்கால் ஒரு இனத்தின் நம்பிக்கைகள் அத்தனைக்குமே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக எம்மில் பலர் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பெரிய அலையில் எதிர்நீச்சல் போட்டு போராடி இன்று கோப்பாயில் Crafttary கைப்பணி தொழிற்சாலையினை நடத்தி வெற்றியின் உச்சம் தொட்டு நிற்கின்ற சுரேஸ்குமார் பலருக்கும் ஒரு உன்னத உதாரணம்.
யுத்தம் முடிந்து நிர்க்கதியாக இருந்த சுரேஸ்குமார் போன்ற பல முன்னாள் போராளிகள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற வழிகாட்டிக்கொண்டிருக்கிறார் பிரபல தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன்.
அவரின் வழிகாட்டலில் Crafttary கைப்பணி தொழிற்சாலை ஆரமபிக்கப்பட்டு ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, தமிழர் பகுதியில் மாணவர்களின் கல்வி, ஏற்றுமதி பொருளாதாரத்தின் அவசியம், புலம்பெயர் முதலீட்டாளர்கள் தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக்காணொளியில் காணலாம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |