புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது-ரவூப் ஹக்கீம்
கடும் போக்கு தீவிர அரசியல் கொள்கைகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் தேவை அரசாங்கத்திற்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தீவிர அரசியல் கொள்கைகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதே அரசின் நோக்கம்
கடுமையான தீவிர அரசியல் கொள்கை நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் அவசியம் அரசாங்கத்திற்கு உள்ளது. அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் மூலம் இதனை காணமுடிகிறது.
புனர்வாழ்வு சட்டமூலத்தின் முழுமையான வரைவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் இப்படியான தீர்ப்பு கிடைத்ததில்லை.
அண்மைய கால வரலாற்றில் முழு சட்டமூலமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில்லை.
கடந்த ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போன்ற போராட்ட காரர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதே அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
