வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் திருக்கோணமலையில்
வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பிராந்திய காரியாலயம் ஒன்று திருக்கோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.
அதாவது வெளிநாடுகளுக்கு செல்ல வீசா அனுமதியை பெறும்பொருட்டு தூதரகங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் வெளிநாட்டு அமைச்சில் சான்றுறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை திருக்கோணமலையில் அமைந்துள்ள அலுவலகத்தில் செய்துகொள்ள முடியும்.
அதாவது பேச்சு வழக்கில் 'Foreign Ministry seal அடித்தல்' என்று சொல்லப்படும் ஆவண சான்றுறுதிப்படுத்தல், வெளிநாடுகளில் நிர்கதியான நிலையில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவரல், வெளிநாடுகளில் இறந்தவர்களின் உடல்களை கொண்டுவருதல், வெளிநாடு ஒன்றில் இருந்து வரவேண்டிய நஷ்டஈடு மற்றும் பெறுவனவுகளை பெறல் போன்ற சேவைகளை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.
கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லவேண்டிய அவசியமில்லை. அனைத்துவிடயங்களையும் திருக்கோணமலை அலுவலகத்தில் நிறைவேற்றி கொள்ளமுடியும்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
