வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல்
வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (16.03.2023) பதிவாகியுள்ளது.
வலி. கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டதன் பின்னர் வீடு திரும்பிய போது, மூவர் பிரதேச சபையின் உறுப்பினரையும் அவரது மனைவியையும் பின்தொடர்ந்துள்ளனர்.
நகை அறுக்க முயற்சி
இந்நிலையில் பிரதேச சபையின் உறுப்பினர் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து பிரதேச சபையின் உறுப்பினரின் மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்டபோது இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதி
இதையடுத்து அங்கு திரண்டவர்கள் இருவரையும் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
