இலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்படுவதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
இலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கையின்மை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவீட்டர் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையான அமைப்பு(சிஸ்டம்) பிரச்சினை அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கை இல்லாமையே என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றக்கூடிய மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உறுதிபூண்டுள்ள, செயல்பாட்டு அமைச்சரவை உறுப்பினர்களே தேவை. இந்த அமைச்சரவை, அரசியல் பேச்சுவார்த்தைகளின் விளைவாக உருவான அணியாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
போதுமான பெரிய பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை. என்ற செய்தி தொடர்பிலேயே சஜித் பிரேமதாசவின் கூற்று வெளியகியுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள்
கொண்ட பேரண்ட பொருளாதாரக் கொள்கை அவசியமானது என உலக வங்கி தெரிவித்திருந்தது.