மன்னாரில் அதிகரிக்கும் கனிய மணல் அகழ்வு: மக்கள் போராட்டம் (VIDEO)
புதிய இணைப்பு
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனிய மண் அகழ்வு இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசாலை பொது மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப் போராட்டம் இன்று (24) பேசாலை நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்

மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கனிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும் அதே நேரம் மீன் வளம் மற்றும் கடல் வளங்களை அழிக்கும் காற்றாலை மின்செயற்திட்டத்தை மன்னார் தீவக பகுதிக்குள் மேற்கொள்ள வேண்டாம் என கோரிய மக்களினால் இவ் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் பின் பொது மகஜர் ஒன்றும் பொது மக்களுக்கு வாசிக்கப்பட்டுள்ளது.
மகஜரை கையளிப்பு நடவடிக்கை
அதனை தொடந்து பேரணியாக சென்று மன்னார் பிரதேச சபையில் மகஜரை கையளிக்க மக்கள் தீர்மானித்திருந்தனர்.

இந்த நிலையில் மகஜரை பெற்று கொள்ள வேண்டிய தவிசாளர் பிரதேச சபையில் இல்லாத நிலையில் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் பேசாலை பகுதியில் இடம் பெறும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காற்றாலை செய்ற்திட்டத்திற்கு முழு பொறுப்பும் மன்னார் பிரதேச சபை தான் எனவும் மகஜரை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மன்னார் பிரதேச சபை தவிசாளர் இஸ்ஸதீன் ஓடி ஒளிந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈட்பட்ட மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

தொடர்சியாக காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக பிரதேச சபைக்கு முன்பாக கேஷங்களை எழுப்பிய பொது மக்கள் பிரதேச சபை தவிசாளர் இல்லாத நிலையில் உப தவிசாளரிடமோ அல்லது செயலாளரிடமோ மகஜரை கையளிக்க விரும்பவில்லை என தெரிவித்து கலைந்து சென்றுள்ளனர்.
இப் போராட்டத்தின் போது மன்னார் போசாலை பகுதியில் கடைகள் முழுவதும் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள்
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மன்னாரில் இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயுவதற்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நேற்று(23) இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

விசேட கலந்துரையாடல்

விழிப்புணர்வு போராட்டம்
மேலும், மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும், காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படாது விட்டால் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் இவ்விடயம் குறித்து மௌனம் காத்து வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொறியியலாளர் சங்க
பிரதிநிதிகள், கடற்தொழில் அமைப்பு மற்றும் மத தலைவர்கள் உட்பட பலர் இக் கலந்துரையாடலில் பங்குப்பற்றியுள்ளனர்.




டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan