கொரோனா தடுப்பூசி தொடர்பில் குழப்பமான மனநிலையில் இலங்கை மக்கள்?
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி, பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க தடுப்பூசி பரிசளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவினால் 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக கொரோனா தடுப்பூசியை தருவிப்பது தொடர்பான குழுவின் தலைவர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொரோனா தடுப்பூசியை விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துக் கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ள விடயமானது இலங்கை மக்களிடையே பல்வேறு விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை மக்கள் குழப்பமான ஒரு மனநிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான விரிவான தொகுப்பு,
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri