ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தொடர்பில் தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை மேற்கோள் காட்டி, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.
ஒரு தனிநபருடன் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது, தனிநபரின் தனியுரிமையின் மீதான தேவையற்ற விடயத்துக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மறுப்பு
எனினும் இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மை ஆதரவாளர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களிடமிருந்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அரச ஊடக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர்கள் - இரகசியமானவை என வகைப்படுத்தப்படக்கூடாது என்று வாதிடுவதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆர்வலர்களை கோடிட்டு தகவல் வெளியாகியுள்ளது.
