பிரித்தானியாவிற்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட 126 அகதிகள்
பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமான முறையில் ஆங்கில கால்வாய் ஊடாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, Pas-de-Calais கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மூன்று தற்காலிக படகுகளில் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாவது படகு Dunkerque இல் இருந்து புறப்பட்டுள்ளதுடன், இதில் ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் பயணித்துள்ள நிலையில், இரண்டாவது படகில் 43 பேரும், மூன்றாவது படகில் 40 பேரும் என மொத்தமாக 126 பேர் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தில் மாத்திரம் 16 ஆயிரம் பேர் பிரித்தானியா நோக்கி படகில் பயணித்துள்ளனர் என பிராந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஓய்வெடுக்க தாய்லாந்து சென்றுள்ள நடிகை சமந்தா... தங்கும் அறையின் ஒரு நாள் வாடகை எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam