21ம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற பொது வாக்கெடுப்பு தேவை
உத்தேச 21ம் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இருபத்தியோராவது திருத்தச் சட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றின் மூலம் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று சட்டமா அதிபர் இன்று அறிவித்துள்ளார்.
21வது திருத்தச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தாக்கல்
21வது திருத்தச் சட்டத்தை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
சட்ட மா அதிபர் சார்பில் சொலிசுட்டர் ஜெனரல் இந்திக்கா தேமுனி டி சில்வா, இந்த விடயத்தை உச்ச நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்கள் குழமொன்று இந்த மனுவை பரிசீலனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
21ம் திருத்தச் சட்டம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் பிரதமர் ரணிலின் முயற்சிகளுக்கு இது பாரிய பின்னடைவாக கருதப்படுகின்றது