இயக்கச்சியில் மாணவர்களின் நன்மை கருதி உருவாகும் புதிய முயற்சி
இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் புதிய முயற்சியாக கல்விப்பாசறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த கல்விப் பாசறை திறப்பு விழாவானது நாளை (16) இடம்பெறவுள்ளது.
ஓரிரு மாதங்களிற்கு முன்னர் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பாசறை கடந்த வருட இறுதியில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது இயக்கச்சி பகுதியிலுள்ள மாணவர்களின் நன்மை கருதி இலவசமான முறையில் றீ(ச்)ஷாவின் கல்விப்பாசறை திறப்பு விழா இடம்பெறவுள்ளது.
மாலை நேர வகுப்புக்கள்
இதில் 5 தொடக்கம் 11 வரையான மாணவர்களிற்கு மாலை நேர வகுப்புக்கள் இடம்பெறும்.

குறிப்பாக நவீன வசதிகளுடைய வகுப்பறைகளில் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இந்த பாசறையில் அப்பகுதியிலுள்ள மாணவர்கள் கலந்து பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam