றீச்சாவில் குழப்பம் விளைவிக்க பிரான்சில் இருந்து சென்ற உத்தரவு - சிக்கியது பெரும் ஆதாரம்..
றீச்சா (Reecha) உணவுத் திருவிழாவில் (Food Festival) ஏற்பட்ட சர்ச்சைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
ஐபிசி (IBC) மற்றும் லங்காசிறி நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் இந்த உணவுத் திருவிழாவிற்காக பெரும் உழைப்பைச் செலுத்திய நிலையில், எதிர்பாராத மக்கள் கூட்டத்தால் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், உணவுத் திருவிழாவின் தோல்விக்கு ஒரு குறிப்பிட்ட குழுவின் திட்டமிட்ட வன்முறை மற்றும் குழப்பங்கள் தான் காரணம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த உணவுத் திருவிழாவைத் திட்டமிட்டு முறியடிக்க, பிரான்சிலிருந்து சில உத்தரவுகள் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சில குரல் பதிவுகள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் கூட்டம் அதிகரித்ததாலும், எதிர்பாராத நெருக்கடியாலும் ஏற்பட்ட சிரமங்களுக்கு கந்தையா பாஸ்கரன் மனப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளார் . திருவிழா நடந்த இடத்தில் உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்டும், சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
கந்தையா பாஸ்கரன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டவை என்றும், அவர் தனது மண்ணின் மீதான பற்றுதலாலேயே இத்தகைய முதலீடுகளைச் செய்கிறார்.
இந்த உணவுத் திருவிழா, உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் நடத்தப்பட்ட முயற்சியாகும் எனினும், சில விசமிகளின் குறுக்கீடுகளால் அது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...