தமிழர் பகுதியில் மாபெரும் சுற்றுலா தளம்! அறிமுகமானது புதிய செயலி
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வற்காக புதிய செயலி (APP) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'ReeCha' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி ஊடாக பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட விரும்புபவர்கள் இந்த செயலியில் முன் பதிவுகளை மேற்கொள்ள முடியும். ReeCha செயலி, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெறவுள்ள எதிர்கால நிகழ்வுகளை ஆராய்வதை எளிதாக்குகிறது.
அதுமட்டுமன்றி நுழைவு சீட்டுகளை வாங்குவது, முன்பதிவு வரலாற்றைச் சரிபார்ப்பது, பிரத்யேக சலுகைகளை அனுபவிப்பது மற்றும் சுவையான உணவு விழாக்கள் என அனைத்து விடயங்களையும் ஒரே செயலியில் சுற்றுலா பயணிகளால் செய்துகொள்ள முடியும்.
எதிர்காலத்தில், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் தங்குமிட வசதிகளுக்கான முன்பதிவுகள் மற்றும் போக்குவரத்து புதுப்பிப்புகள், நிகழ்நேர அட்டவணைகள் தொடர்பான தகவல்களையும் ReeCha செயலி ஊடக மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இன்றே ReeCha செயலி பதிவிறக்க இந்த link ஐ அழுத்தவும்.






