மதுபான போத்தல் விலையை குறைக்குமாறு மீண்டும் கோரிக்கை
மதுபான போத்தல் விலையை குறைக்குமாறு ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னமும் கல் எனப்படும் மதுபான வகையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கை
மஹியங்கனையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கை விடுத்த போது ஜனாதிபதி ரணில் பிரசார மேடையில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அரசாங்க ஊழியர்களுக்கு சலுகை வழங்கினார் எனவும், மதுபானம் அருந்துவோருக்கு சலுகை வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாக்களிப்பவர்களில் அதிகமானவர்கள் மதுபானம் அருந்துவோர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் 16 இலட்சம் எனவும் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை 50 இலட்சம் எனவும் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam