ரூபாவின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு! மேலும் குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை
ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளது.
இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைவடையும் விலை
இந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவினாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி ரூ.50 முதல் 25 சதம் வரை குறைக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.600 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி வரி 25 காசுகளாக குறைக்கப்பட்டதன் பின்னர் 25 சத வரியின் கீழ் 14 இலட்சம் மெற்றிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 04 இலட்சம் மெற்றிக் தொன் பருப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த விற்பனையாளர்கள் மேலும் கூறுகின்றனர்.
இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு மொத்த விற்பனை விலைகள் குறைவடைந்துள்ளமையின் பயனை இந்நாட்டு நுகர்வோர் பெற்றுக்கொள்ள வேண்டுமென வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri