மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் தாக்குதல்கள்: ஐ.நா. எச்சரிக்கை
செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
செய்தி நிறுவனமொன்றுக்கு நேற்று (24.1.2024) அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாவில் நடைபெற்றுவரும் போர் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஹவுதி கிளா்ச்சியாளர்கள்
செங்கடலில் ஹவுதி கிளா்ச்சியாளர்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினர் உதவுவது வெளியாகி உள்ளது.

இதனால் சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அதேபோல் காசா பிரச்சினைக்கு அமைதி வழியே தீர்வு.
இஸ்ரேல் - பலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செங்கடலில் தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிப்பதாகவும் இத்தாக்குதல் தொடா்ந்தால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக் கூடும் என்றும் ஐ.நா. பொதுச் சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam