மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிப்பு
நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்ற எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண் சரிவு எச்சரிக்கை இன்று (10) மாலை 04:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை - மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவுகள்
கண்டி மாவட்டம்: பாதஹேவஹெட, பாததும்பர, ஹரிஸ்பத்துவ, தொலுவ, தும்பனை, பூஜாபிட்டிய, உடுநுவர, கங்காவட கோரளை, அக்குரண, மினிபே, உடபலத, ஹதரலியத்த, குண்டசாலை, பன்வில, மெததும்பர, உடதும்பர, யப்தினகௌ, தெல்தோட்டை, கொடதும்பரா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, அரநாயக்க, கலிகமுவ, வரகாபொல, யட்டியந்தோட்டை மற்றும் ரம்புக்கன DSDகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
குருநாகல் மாவட்டம்: ரிதீகம, மாவத்தகம மற்றும் மல்லவப்பிட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்ட, வில்கமுவ, லக்கல பல்லேகம, அம்பங்கங்க கோரளே, உக்குவெல, மாத்தளை, நாவுல, பல்லேபொல மற்றும் யடவத்த உட்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam