உடன் வைத்தியரை நாடவும்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ஆதாரங்களிலும் அழுக்கு நீர் கலந்துள்ளதால், கொதித்தாறிய நீரை அருந்துவது மிகவும் அவசியம் என பிரதி சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் கலாநிதி ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கீரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.
இதேவேளை, இடைதங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இடையே சின்னம்மை, கண் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும்.
எனவே அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
