அதிகரிக்கும் அரிசியின் விலை: வர்த்தக அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
சமீபகாலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக வர்த்தக அமைச்சு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இந்நிலையில், விலைக் கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் போது அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டால் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அரிசிக்கு நாம் வழங்கிய கட்டுப்பாட்டு விலையை விட அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி வியாபாரிகளும் செயற்படுகின்றனர்.
அரிசி இறக்குமதி
இதை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று தலைமை தாங்கி நானும், பணிப்பாளர்களும் கண்டிப்பாக சுற்றிவளைப்புக்களை நடத்துவோம்.
அப்படியும், அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாது போனால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவித்துள்ளேன்." நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அரிசியின் விலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அரிசி வியாபார சங்க தலைவர் டட்லி சிறிசேன, அரிசியை மறைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.