முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ பிரிவில் காணப்படும் பல்வேறு வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
பயிலுனர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பணிப்பாளர் சபை, இராணுவ முகாமினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ பிரிவில் காணப்படும் பல்வேறு வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதன்படி படைவீரருக்கு உரித்தாகும் நலனோம்பல் வசதிகள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள், அடிப்படை தகுதிகள், கொடுப்பனவுகளும் அடங்கலாக ஒவ்வொரு அலுவலருக்கும் உரிய மொத்த சம்பளம், நேர்முகப் பரீட்சைக்கு தேவையான சான்றிதழ்கள், படை வீரராக இராணுவத்தில் இணைவதால் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கற்கை நெறிகள், ஆட்சேர்ப்புச் செய்யப்படும் தொழில்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக குறித்த ஆட்சேர்ப்பு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பணிப்பாளர் சபையின் மாவட்ட இராணுவ உத்தியோகத்தர்களான கமால்(071 8645460 / 077 4983991),நிசாந்த(076 4572397) அல்லது முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினை (021 2291777) தொடர்பு கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam