இருவேறு பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்திற்கு உட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
36 அகவையுடைய பூதன்வயல் முள்ளியவளையினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ரவிச்சந்திரன் என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது , சடலம் முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் உள் நுழைந்த காட்டு யானையால் விவசாயியான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்டி வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தாமோதரம் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
