சிறுவனைக் காப்பாற்றச் சென்று காணாமல்போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
புத்தளம் மாவட்டம், மாரவில முதுகட்டுவ கடலில் மூழ்கிய சிறுவனைக் காப்பாற்ற சென்று காணாமல்போன நபர், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொபேஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பிங்கிரிய பகுதியிலிருந்து மாரவில பிரதேசத்துக்கு சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த சிலர், மாரவில முதுகட்டுவ பிரதேசத்திலுள்ள கடலுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கி திடீரென காணாமல்போனார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் கூக்குரலிட்டுள்ளனர். அங்கு நின்றவர்கள் கடலுக்குள் சென்று குறித்த சிறுவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், சில மணிநேரத்தின் பின்னர் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சிறுவனை மீட்பதற்காகச் சென்றவர்களில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடலில் மூழ்கி
காணாமல்போயிருந்தார்.
இவரைக் கடந்த இரு நாட்களாகத் தேடி வந்த நிலையில், சடலமாக இன்று அவர்
கரையொதுங்கியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
