இரவு நேரத்தில் குளிக்கச் சென்று காணாமல்போன நபர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி - புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நாகேந்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் நெல் அறுவடைக்காக வந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 37 வயதுடைய சிங்காரவேல் மனோகரன் (06ம் யூனிட் சிவிற் சென்ரர் வட்டக்கச்சி) என தெரியவருகிறது.
நேற்றிரவு குளிக்கச் சென்ற குறித்த நபரை காணாததால் அவரை தேடிய போது அவர் கொண்டு சென்ற சாரம் மற்றும் சவர்க்காரம் என்பன கிணற்றின் அருகில் கிடப்பது அவதானிக்கப்பட்டு இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போது கடற்படையின் உதவியுடன் குறித்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan