நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 20 வயது இளைஞன்! விசாரணைகள் தீவிரம்
ஹட்டன் - காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நிவ்வெளிகம பகுதியில் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒரு ஜோடி பாதணி,ஸ்மார்ட் போன் என்பன காணப்பட்ட நிலையில்,இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் தேடுதல்களின் போது குறித்த பகுதியில் சடலம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் கிடந்த ஸ்மார்ட் போன் மற்றும் பாதணியும் நோர்வூட் மேற்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய சரத்குமார் எனும் இளைஞனுடையது என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
