மிஹிந்தலையில் கடமையிலுள்ள பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குறித்து நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட அறிவிப்பு
மிஹிந்தலை புனித பூமியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீள பெறப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் இராணுவம்
அதன்படி மிஹிந்தலை புனித பூமியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 251 பொலிஸாரையும், இராணுவத்தினரையும் மீள பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் உரிய கோரம் இன்மையினால் இன்றைய நாளுக்கான சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சபை நடவடிக்கை ஒத்திவைப்பு
நாளை (11) காலை 9.30 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இடம்பெற்று வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உரிய கோரம் இன்மையினால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
