ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு - ஒருவர் கைது
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்களைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(25.10.2026) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
137 மதுபான போத்தல்கள் மீட்பு
இதன்போது, 137 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானங்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam