யாழின் முக்கிய பகுதி ஒன்றில் மனித எச்சங்கள் மீட்பு (Video)
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டாரப் பகுதியில் கிடங்கு ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதற்குள் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றின் கட்டுமானம் மேற்கொள்வதற்காகக் கிடங்கு வெட்டியபோதே குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இன்றையதினம் (21.06.2023) அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த குழி மேலதிகமாக அகழப்பட்ட நிலையில் 27 பற்கள் உட்பட ஒரு மனித எலும்புகூடு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சான்றுப் பொருட்கள் ஆய்விற்காக அனுப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மனித எச்சங்கள் சுமார் 20 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் என ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்குகளின் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை: ஏற்பட்டாளர் தித்தகல்லே பிக்குவின் ஊடகவியலாளர் மாநாட்டில்...
சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம்: விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
“இந்த நாட்டில் இரத்தம் சிந்தியது போதும்” மதச் சாயலுக்குள் மீண்டும் பாழாய்ப்போன அரசியல்-புதிய சிறகுகள் அமைப்பு சுட்டிக்காட்டு
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam