யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரையில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு
யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையில் காணாமல்போன மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், மு/புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பி.ரவிச்சந்திரன் என்பவரே இன்று (15.02.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாலை யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியிலுள்ள கடற்கரையிலிருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக இருவர் சென்றுள்ளனர்.
குடாரப்பு கடற்கரை
இதன்போது, தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது. அதில் ஒருவர் நீந்திக் கரைசேர்ந்துள்ள நிலையில், மற்றவர் கடலில் மூழ்கி காணமல்ப்போயுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை குடாரப்பு கடற்கரை பகுதியில் காணாமல்போன மீனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இதனையடுத்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி
எஸ்.சிவராசா, பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
