68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் - நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை வங்காலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வங்காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று அச்சங்குளம் - நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கஞ்சா பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 228 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, இதன் இலங்கை பெறுமதி 68 மில்லியன் ரூபாய் என தெரியவந்துள்ளது.
எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
