வட பகுதியில் கஞ்சா மீட்பு! இருவர் கைது (photos)
யாழ். அனலைதீவு கடற்பரப்பில் 425 கிலோ எடையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (03.04.2023) பதிவாகியுள்ளது.
இந்த கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் அனலைதீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.

இதன்போது அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகங்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: தீபன்
தலைமன்னார்
தலைமன்னார் - மணல்மேடு கடல் பகுதியில் 04 கிலோ ஐஸ் போதைப்பொருளை மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம்(02.02.2023)இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் நீரில் நிலைதடுமாறி சந்தேகத்திற்கிடமான சாக்கு ஒன்றை மீட்டுள்ளனர்.
இதன்போது சாக்கில் அடைக்கப்பட்டிருந்த 04 பொதிகளில் சுமார் 04 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பகுதியில் தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வர முடியாமல் கைவிட்டிருக்கலாம் என்று கடற்படை சந்தேகிக்கிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பொதிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.