வற்றாப்பளையில் சிறுவன் சடலமாக மீட்பு: தீவிர விசாரணையில் பொலிஸார்
முல்லைத்தீவு- வற்றாப்பளை பகுதியில் சிறுவன் ஒருவன் நீர் நிலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்றையதினம் (25) காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து இன்றையதினம் தேடுதல் நடத்திய போது அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது, 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டானா அல்லது விபத்தா என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri
