தனியார் காணியொன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு
கிளிநொச்சி - கோரக்கண்கட்டுப் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் நேற்று குழி ஒன்றை வெட்டிய போது சில துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனை அடுத்து கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு இன்றைய தினம் சென்ற கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
இதேவேளை மேலும் குறித்த குழியினுள்
வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam