கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு - பெண்ணொருவரும், அவரின் மகளும் கைது
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணுக்கும், மற்றொரு பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பே கொலையில் முடிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 42 வயதான விஸ்வநாதம்மா என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது கணவனுடன் வாழ்ந்த வந்த நிலையிலேயே, இரண்டாவது மனைவியை, முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கொலை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
குடும்பத்தில் மனைவிமார்களுக்கு இடையில் மிக நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் தனது மகளுடன் இணைந்து, முதலாவது மனைவி, இரண்டாவது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.
குறித்த பெண்ணை கொலை செய்த, முதலாவது மனைவி மற்றும் மகள், அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்ற நிலையில், பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார், சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
முதலாவது மனைவி தனது கணவரை விட்டு பிரிந்த நிலையில், கணவர், இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மிக நீண்ட நாட்களின் பின்னர், முதலாவது மனைவி மீண்டும் வருகை தந்த, இரண்டாவது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பெண்ணும், அவரது மகளும் தப்பிக்க முயற்சித்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan