ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சுமார் 300 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினரும் பொலிஸாரும் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் இந்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப் பொருளுடன் பத்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப் பொருள் போக்குவரத்துச் செய்யப்பட்ட இரண்டு மீன்பிடிப் படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகு என்பனவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவர் என கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
