அளவெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட டீசல் மீட்பு
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அளவெட்டி மத்தி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 291 லீட்டர் டீசல் நேற்று(02) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக தெல்லிப்பளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
டீசல் மீட்பு
இதன்போது அங்கு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 70 லீட்டர் டீசலையும், ஏற்கனவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பரல் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி - கரடி போக்கு, நவீன புரம் பகுதியில் 6400 லீட்டர் டீசல் மற்றும் 200 லீட்டர் பெட்ரோருடன் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
