கடலில் மாயமான சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்பு
மாத்தறை – வெலிகம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மற்றைய சிறுமியைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிகம கடற்பகுதியில் 4 சிறுமிகள் அவர்களது பெற்றோருடன் குறித்த பகுதியில் இன்று மதியம் நீராடச் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து இரண்டு சிறுமிகள் காப்பற்றப்பட்ட நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காணாமல்போயிருந்த சிறுமிகளில் ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி மற்றும் காணாமல்போயுள்ள சிறுமி ஆகியோர் வெலிகம
பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
