காணாமல் போன குடும்பப்பெண் சடலமாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை
மாத்தளை - கலேவெல பகுதியில் வீடொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவமானது இன்று(29) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர்.எம்.பத்மலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல் போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தமைக்கான காரணம்

அவர் அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றிருந்தார் என்று உயிரிழந்த பெண்ணின் கணவர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலை வரை மனைவி வீடு திரும்பாத காரணத்தால், வீட்டுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் மனைவியின் காலணி இருப்பதைக் கண்டு, கிராம மக்களுடன் சேர்ந்து கிணற்றில் தேடினார் என்றும் கணவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan